கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் நாளைய அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மெனிங் சந்தை, 4ம் மற்றும் 5ம் குறுக்கு வீதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.