புலம்பெயர்ந்தோர் என எவரும் இல்லை என்கிறது அரசாங்கம்!

0

புலம்பெயர்ந்தோர் என எவரும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர் என்ற சொல்லிற்கு இலங்கை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

டயஸ்போரா என்பது கிரேக்கச் சொல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.