புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

0

யுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என்றும் குமரன் பத்மநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் என்றும் தெரிவித்தார்.