புலிகள் அமைப்பினை ஊக்குவித்த குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டவர் கைது!

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான ஒருவரே நேற்று(திங்கட்கிழமை) புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.