பெண் ஒருவரின் எலும்பு கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிப்பு

0

யாழ்ப்பாணம் பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின் எலும்பு கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் சாலை வளாகத்தில் கூடாரம் ஒன்று அமைப்பதற்காக இன்று காலை (14) குழி தோண்டிய போது அந்த குழியில் எலும்பு கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் கிடைத்துள்ளன.

அவற்றைக் கண்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், யாழ். மாநகர சுகாதார பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ். மாநகர பிரதி முதல்வர், கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்டனர்.

அத்துடன் பொலிஸாரால் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதுடன், எலும்பு கூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, ஆடைகள், கைப்பை ஒன்று, பற்பசை, சேலை உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், 15 அல்லது 16 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவராக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.