பெரியகல்லாறு பகுதிகளில் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பு- பொதுச்சுகாதார பரிசோதகர்கள்

0

மட்டக்களப்பு- பெரியகல்லாறு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அண்மையில் பெரியகல்லாறு பகுதியின் 2ஆம், 3ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனாலும் குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பெரியகல்லாறு 3ஆம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள இரண்டு இடங்களில் இடம்பெற்ற மரண வீட்டுக்கு சென்று வந்தவர்களில் அதிகளவானோரே வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றும்(ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதியில் 113பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14பேர், வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே முடக்கப்பட்டுள்ள இந்த பகுதியிலுள்ளஅனைத்து மக்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகளில் இதுவரை 94 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.