பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு!

0

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.