பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்

0

மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சுப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேல்மாகாணம், தனிமைப்படுத்தப்பட்டப் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான செயலணி, சுகாதாரத் தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ள நிலையிலேயே பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் போலியான தகவல்களை பரப்பி பெற்றோர் மத்தியில் தேவையற்ற பதற்றத்தினை ஏற்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.