இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே பயணிகளை கொண்டு செல்ல முடியும் என சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் 1.2 வீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.a