பேருந்து கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு – முழு விபரம்

0

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 14 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.