தனியார் பேருந்து துறையை கட்டியெழுப்புவதற்காக பேருந்துகளை கொள்வனவு செய்ய 4 வீத இலகு வட்டிக்கு கடன் பெற்றுக் கொடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாழ்வான அடிப்பகுதியை கொண்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே இந்த இலகு கடன் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லொறி அடிச்சட்டங்களில் வடிவமைக்கப்படும் பேருந்துகளுக்கு இதன் பின்னர் அனுமதி வழங்கப்படாது எனவும் பயணிகள் போக்குவரத்துக்கென முறையாக வடிவமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.