பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டுபிடிப்பு

0

மினுவாங்கொட தொழிற்சாலையின் கொரோனா பரவலின் உப பரவலான பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவல் பணத்தாள் மூலம் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன் சந்தைக்கு இடையில் வைரஸ் பரவ பணத்தாள் தான் முக்கிய காரணம் என விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பேலியகொட உப பரவலில் நான்கு நாட்களுக்குள் 5513 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட விசாரணையில் பேலியகொட மீன் சந்தையில் B.1.42 என்ற ஆபத்தான கொரோனா பணத்தாள் ஊடாக பரவியுள்ளது.

பணத்தாள் மற்றும் மீன் சந்தையில் விற்பனை செய்யும் மீன் விற்பனையாளர்களின் எச்சில் ஊடாக இந்த கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொரோனா பரவல் கடந்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து உப பரவலாக பேலியகொட கொரோனா பரவல் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.