பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு நிதி செலவாகும்?

0

பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு நிதி செலவாகும் என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

தற்போது வரையில், தேர்தலுக்கு அவசியமான நிதி தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது என சமன் ஶ்ரீ ரத்நாயக்க பதிலளித்தார்.

COVID-19 தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால், எவ்வளவு செலவாகும் என்பதை தீர்மானிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செலவாகும் நிதி தொடர்பில் மதிப்பீடு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.