பொதுத் தேர்தல் பெரும் கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமை

0

பொதுத் தேர்தல் பெரும் கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். 

கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்தது போல் இம்முறையும் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் அதற்கு உயர் நீதிமன்றம் இடமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது மக்களுக்கு தங்களுக்கு தேவையான அரசாங்கத்தை நியமிப்பதற்கான ஜனநாயக உரிமை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.