பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய முடியாது! – வாசுதேவ நாணயக்கார

0

பொதுபல சேனா அமைப்பை தான் எதிர்த்தாலும் அதனை தடை செய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பை தடை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

அப்படி தடை செய்ய முடியாது. அந்த அமைப்பு அடிப்படைவாத அமைப்பாக இருக்கலாம்.

நான் பொதுபல சேனாவை கடுமையாக எதிர்க்கின்றேன். எனினும் அதனை தடைசெய்ய முடியாது.

ஒரு அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் மாத்திரமே அதனை தடை செய்ய வேண்டும்.

அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாற்றது என குறிப்பிட்டுள்ளர்.