பொதுமக்களின் நடத்தை கட்டுப்பாடுகளை பாதிக்கும்! – அஜித் ரோஹன

0

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை பொது மக்கள் கடைப்பிடித்து, பொறுப்புடன் நடந்து கொண்டால், ஜூன் 8 ஆம் திகதி கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் புதிய கோவிட் துணைக் கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டால், அந்தக் காலத்தை நீட்டிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை மீண்டும் திறக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த சில நாட்களில், மருந்தகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றார். எந்த மளிகை கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், அதே நேரத்தில் பொது போக்குவரத்து சேவைகளும் செயல்படாது.

எனினும், மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் எந்தவொரு நபரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு தனியார் வாகனத்தில் அல்லது வாடகை கார்களில் செல்லலாம் என்று அவர் குறிப்பிட்டார்.