நாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளங்களின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்ட 2 வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (09) மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து இணையத்தளங்களின் மூலம் நிதி மோசடியில் ஈடுப்பட்ட சில வெளிநாட்டவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகநபர்களிடம் எவரும் சிக்காதிருப்பதற்காக இணையத்தளங்களின் ஊடாக பண கொடுக்கல் வாங்கலில் ஈடுப்படும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.