பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து CID விசாரணை!

0

பொது இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆராயுமாறு நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தனுஷ்க தில்ஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு எதிராக நோய் பரவும் வகையில் செயற்படுபவர்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.