பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா

0

பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பொது சுகாதார அதிகாரியின் குடும்பத்தினரை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.