பொது போக்குவரத்து சேவை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

0

ஜனாதிபதியுடன் இன்று (08) கலந்துரையாடியதன் பின்னர், பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.