பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

0

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்களை நடத்துவதன் மூலம் கொரோனா கொத்தணிகள் உருவாகினால் அந்த பிரதேசத்தை தனிமைப்படுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.