அம்பாறை – பொத்துவில் சின்ன புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் நேற்று (08) மாலை மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் வீடு திரும்புவதற்காக கொட்டுக்கல் முகத்துவாரத்தை கடக்க முற்பட்ட வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.
நேற்று முதல் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இன்று (09) பிற்பகல் வேளையிலேயே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.