பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி 3ஆம் நாள் வவுனியாவில் நிறைவு!

0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மூன்றாவது நாள் போராட்டம் வவுனியாவை வந்தடைந்த நிலையில் நிறைவுபெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், முல்லைத்தீவுக்குச் சென்று புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி ஊடாக வவுனியாவை அடைந்துள்ளது.

இந்நிலையில், நாளையதினம் காலை 7.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி மன்னார் மாவட்டம் நோக்கிப் பயணிக்கவுள்ளது.