பொரளையில் கோர விபத்து – ஏழு பேர் படுகாயம்!

0

பொரளை – டி.எஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், அம்பியுலன்ஸ் ஒன்றும் மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸூம் தேசிய வைத்தியசாலையிலிருந்து மாத்தறை நோக்கி தாதியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் அம்பியுலன்ஸிலிருந்த சிறு குழந்தையொன்று உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.