பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை

0

முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) உற்பத்திகளை எடுத்து வந்த விவசாயிகள் மீண்டும் அவற்றை எடுத்துச்செல்ல நேரிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு செய்ய முடியாது என தம்புத்தேகம விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் குறிப்பிட்டது.

இதேவேளை, கெப்பெட்டிப்பொல விசேட பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.