பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியது அமெரிக்கா

0

இலங்கையில் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, அது நீண்டகால ஸ்திரதன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசியவிவகாரங்களிற்கான பணியகத்தின் முதன்மை துணை உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்தோ பசுவிக்கில் இலங்கை அமெரிக்காவின் முக்கிய சகா எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையிலான உறவின் பலம் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் வெளிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளிற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மீள்உருவாக்கம் ஆகியவற்றிற்கும் ஆதரவு வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.