ஐ.டி.எச்.வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளர் தப்பியோட்டம்

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை சீனன்குடாவைச் நேர்ந்த முகமட் நசீம் என்ற குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தப்பிச்சென்றவரின் ஒளிபடத்தையும் அவர்தொடர்பான விபரங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.