பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

0

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பொலிஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.