போதையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – 2 பிள்ளைகளின் தந்தைக்கு விளக்கமறியல்

0

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை மது போதையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது உத்தரவிட்டுள்ளார்.

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் திருமணம் முடித்து 2 பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் தனது அயல் வீட்டில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமி ஒருவரை மதுபோதையில் வீட்டிற்கு அழைத்து யாருமில்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறுமி சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விடயத்தை தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.