போலியான தகவல்களை பரப்பிய 16 பேர் கைது!

0

கொரோனா வைரஸ் தொடர்பாக போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இவர்களில் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் சிரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.