போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

0

போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி எனவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்வது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.