போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த 13 இலங்கையர்கள் கைது!

0

போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டார் ஊடாக கனடா செல்ல முயற்சித்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.