மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி வெளியீடு?

0

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நிறுவனங்களின் கடமைகளை ஆரம்பிக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தனியார் நிறுவனங்களின் கடமைகளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறும் குறிப்பிட்ட ஊழியர்களை கடமைகளுக்கு அமர்த்துமாறும் நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பணிகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.