மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது – பவித்ரா வன்னியாராச்சி

0

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

11ஆம் திகதிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளமையால், எதிர்வரும் நாட்களின் நிலையைப் பார்த்து தான் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது தொடர்பில் கூற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வழங்கக்கூடிய பாதுகாப்புகளை வழங்கியுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை எனவும், எனவே மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது எனவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.