மக்களுக்கு வழங்கப்படும் புத்தாண்டு நிவாரண பொதியில் அடங்கியுள்ள பொருட்களின் விபரம்

0

புத்தாண்டை முன்னிட்டு குறைந்த விலையிலான நிவாரண பொதியை சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுமார் 12 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணப்பொதியை நேற்று முதல் சதொச விற்பனை நிலையம் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணப்பொதியில் சந்தையில் உள்ள பொருட்களை விடவும் 410 ரூபாய் இலாபம் கிடைக்கவுள்ளது. இந்த பொருட்களை 1000 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிவாரண பொதியில்

1. வெள்ளை சீனி 1kg – 99.00 ரூபாய்

2. வெள்ளை அரிசி 1kg – 93.00 ரூபாய்

3. சிவப்பு அரிசி 1kg – 89.00 ரூபாய்

4. வெள்ளை நாடு 1kg – 96.00 ரூபாய்

5. பருப்பு 1kg – 165.00 ரூபாய்

6. கோதுமை மா 1kg – 84.00 ரூபாய்

7. உப்பு 1kg – 43 ரூபாய்

8. நெத்தலி கறுவாடு 200g – 115.00 ரூபாய்

9. LSL காய்ந்த மிளகாய் 100g – 83 ரூபாய்

10. சோயா மீட் 50g – 35 ரூபாய்

11. STC தேயிலை தூள் 100g – 95.00 ரூபாய்

12. முகக் கவசம் 1 – 14.00 ரூபாய்