ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமமீது இன்று (22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்துகம வேகந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டமொன்று தரம்குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அது தொடர்பில் கண்காணிப்பதற்காக பாலித தெவரப்பெரும இன்று சம்பவ இடத்துக்கு சென்றிருந்தார்.
இதன்போது குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கும், தெவரப்பெருமவுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போதே அவர் தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
” இயந்திரத்தால் தாக்கி துப்பாக்கியைகாட்டி மிரட்டினர்.” – என்று பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.