மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் – பசில்!

0

மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளுநர்கள், மாகாண, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் காரணமாக மக்களை நெருக்கடிக்குள்ளாகாத வகையில் செயற்படுவது மக்கள் பிரதிநிதிகளதும், அதிகாரிகளதும் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.