‘மங்களவின் திட்டத்துக்கு உயிர்கொடுக்கிறது அரசு’

0

விரைவில் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் வலுசக்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி அந்த சூத்திரம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகின்றது.

நல்லாட்சியின்போது அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் எரிபொருள் விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டது. அதற்கு அப்போதைய எதிரணியாக இருந்த மஹிந்த அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் எரிபொருள் விலை சூத்திரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.