மஞ்சள் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை

0

சந்தைகளில் உள்ள மஞ்சளின் தரத்தினை பரிசோதிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், பல்வேறு வர்ணங்கள் மற்றும் மா வகைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில், நாடு முழுவதிலிருமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 15 மஞ்சள் தூள் மாதிரிகளை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிக விலைக்கு மஞ்சளை விற்பைன செய்வோரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதுவரை அதிக விலைக்கு மஞ்சளை விற்பனை செய்த 70 இற்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.