மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரத்து

0

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 2172/5 எனும் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மஞ்சள் கிலோ ஒன்றுக்காக 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிக பட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.