ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனா தாக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மஞ்சள் தூள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்த நிலையில், மஞ்சள் தூள் கிலோகிராம் ஒன்றுக்கான உச்ச பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளின் உச்ச பட்ச சில்லறை விலை 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.