மட்டக்களப்பின் சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக குளங்கள், ஏரிகள், நீரோடைகள் மற்றும் குட்டைகள் வற்றுகின்றன.

இதனால் குடிநீருக்கும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வரட்சி காரணமாக கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி உட்பட பல பிரதேசங்களில் வேளாண்மை நிலங்கள் கருகிப்போய் வரண்ட நிலையில்
காணப்படுகின்றன.

இதனால் அப்பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும், தமது அன்றாட செயற்பாடுகளை சரிவரச் செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பிரதேச கால்நடைகள் மேய்ச்சல் நிலமின்றி அலைந்து திரிவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.