மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

0

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள இரா.சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 33 ஆயிரத்து 332 விருப்பு வாக்குகளை சுவீகரித்திருந்தார்.

இந்தநிலையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) காலை முதல் மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் சென்ற சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்திருந்தனர்.

இதன்போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்திருந்தார்.

தனது மக்கள் பணி தொடரும் எனவும் அவர் இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.