மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்ற கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டுமாம்!

0

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரித்த ஹேரத் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘இத்தாலியிலள்ள பீஸா மற்றும் அமெரிக்காவின் ஹம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளை போன்றே கொத்து ரொட்டியை மாற்றுவதற்கு இலங்கை செயல்பட வேண்டும்.

கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஐஸ்கிரீம் கொத்துகூட தயாரிக்கப்படுகின்றது. எனவே, இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.