மட்டக்களப்பில் அம்பியூலன்ஸ் வண்டிமீது தாக்குதல்!

0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கற்களால் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துவிட்டு திரும்பிய அம்பியூலன்ஸ் வண்டி மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது அம்பியூலன்ஸ் வண்டியின் ஒரு பக்கக் கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.