மட்டக்களப்பில் அரசகாணியை அபகரிக்க முயற்சி – நால்வர் கைது : பலர் தப்பியோட்டம்!

0

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள அரச காணியை ஆக்கரமிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்திலுள்ள அரசகாணியை குழு ஒன்று அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக நேற்று(செவ்வாய்க்கிழமை) அரசாங்க அதிபருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

இதன்போது அங்கு காணி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடியநிலையில் 4 பேரை கைது செய்ததுடன் 5 மோட்டர் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.