மட்டக்களப்பில் இரா.சாணக்கியன் அமோக வெற்றி.!

0

நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் அமோக வெற்றிபெற்றுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இரா.சாணக்கியன் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது ஆயுட்காலம் முழுவதும் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து மக்களுக்கு சேவை செய்யவுள்ளதாகவும் இரா.சாணக்கியன் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, மட்டக்களப்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒரு ஆசனமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.