மட்டக்களப்பில் உள்ள ஸ்பாவில் தீ விபத்து!

0

மட்டக்களப்பு பாசிக்குடாவிலுள்ள ஆயுர்வேத சிகிச்சை நிலையம்(ஸ்பா) ஒன்றில் நேற்று இரவு (7) திடீரென ஏற்பட்ட தீயினால் குறித்த கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த தீயினை கட்டுப்படத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு நகர சபை தீயனைப்பு படையினர் கல்குடா பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர்.

இதனால் தீயானது மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மேற்குறித்த நிலையத்தில் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அங்கிருந்த பெறுமதி மிக்க பொருட்கள் சில தீயில் எரிந்துள்ளன. இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையென பொலிசார் மேலும் தெரிவித்தனர். தீ பரவலை தொடர்ந்து பிரதேசத்தில் சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.