மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது!

0

மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(செவ்வாய்கிழமை) சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிகப்பட்டு கடந்த திங்கட்கிழமை (23) திகதி காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டடு பின் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிவரை ஊரங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் நேற்று நண்பகல் வரையும் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 8 பேர் காத்தான்குடியிலும், வாகரையில் 2 பேரும் உள்ளடங்களாக 10 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை கடந்த 20ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையிலான ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தினங்களில் மட்டு மாவட்டத்தில் சட்டத்தை மீறி நடமாடிய 44 பேரை கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.