மட்டக்களப்பில் ஊரடங்கை மீறியவர்கள் உட்பட 33 பேர் ஒருநாளில் கைது

0

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கை மீறி நடமாடிய 29 பேர், கசிப்பு விற்பனையாளர்கள் 4 பேரென 33 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 7 வாகனங்களையும், கசிப்பு ஆகியவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிவரையில் ஆயித்தியமலை, வவுணதீவு, வாழைச்சேனை, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய 29 பேரைக் கைதுசெய்துள்ளதுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட 7 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இதேவேளை, ஆயித்தியமலை, வவுணதீவு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கசிப்புடன் 4 பேரைக் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அவர்களது உறவினர்களை வரவழைத்து மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.